ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே போட்டி போடும் MI vs CSK…, இதில் வெல்ல போவது யார்??

0
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே போட்டி போடும் MI vs CSK..., இதில் வெல்ல போவது யார்??
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே போட்டி போடும் MI vs CSK..., இதில் வெல்ல போவது யார்??

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு முன்னரே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

IPL 2023:

இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியானது, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்க இன்னும் 4 நாட்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முன்னரே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சமூக வலைத்தளத்தில் சாதனை ஒன்றை படைத்துள்ளனர். அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு.., அதிகாரபூர்வ அரசாணை வெளியீடு!!

மும்பை இந்தியன்ஸ் அணியானது, 11.3 மில்லியன் பின் தொடர்பவர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியை தொடர்ந்து, 11.1 மில்லியனுடன் முதலிடத்தை எட்ட CSK அணி முன்னிலை வகிக்கிறது. இந்த பட்டியலில், RCB 10 மில்லியன், KKR 3.5 மில்லியன் மற்றும் DC 3.4 மில்லியனுடன் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர். ஐபிஎல் 16 வது சீசன் முடிவதற்குள் இந்த டாப் 5 பட்டியலில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here