IPL 2022: ஜடேஜா எப்பத்தான்பா கேப்டன்சி பண்ணுவ..? – மீண்டும் பதவிக்கு வரும் தல…?

0
IPL 2022: ஜடேஜா எப்பத்தான்பா கேப்டன்சி பண்ணுவ..? - மீண்டும் பதவிக்கு வரும் தல...?
IPL 2022: ஜடேஜா எப்பத்தான்பா கேப்டன்சி பண்ணுவ..? - மீண்டும் பதவிக்கு வரும் தல...?

தற்போது நடைபெற்று வரும் IPL தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள சிஎஸ்கே அணி, அதிகமாக தடுமாறி வருகிறது. இது குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஜடேஜாவின் கேப்டன் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

கேள்வியில் ஜடேஜா கேப்டன்ஷிப்:

IPL தொடரின் நடப்பு சீசனின் முதல் மூன்று போட்டிகளிலுமே சென்னை அணி தோல்வியை சந்தித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கேப்டன்சி மாற்றம், முதல் போட்டியில் மொயீன் அலி இல்லாதது, பவுலிங்கில் தீபக் சஹார் இல்லாதது, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ப்ளேயிங் 11ல் இல்லை என பல்வேறு பின்னடைவுகள் சிஎஸ்கேவுக்கு இருந்து வருகிறது. இதனால் அணியின் நிர்வாகம் மிகவும் சோகமான நிலையில் உள்ளது. ஒரு வெற்றியை கூட இன்னும் பெறாததால் அடுத்து சுற்று வாய்ப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் முன்னாள் வீரர்களும் இது குறித்து, கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்ததில் இருந்து சிஎஸ்கேவின் நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட டாப் 4 அணிகளில் இடம்பிடித்து ப்ளே ஆஃப் செல்வது கடினமாகிவிடும் என்றும் அறிவித்து உள்ளனர். காரணம் அவர்களின் ரன் ரேட் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து கூறிய ஹர்பஜன் சிங் டோனி தொழில் தான் ஜடேஜா பொறுப்புகளை வைத்துள்ளதாகவும், கேப்டன்சி செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆடி ஓடி கடைசியாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் – மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!!

களத்தில் டோனி தான் கேப்டன் ஆக சமீப போட்டிகளில் செயல்படுகிறார். ஆலோசனைகளின் போதும் டோனி தான் முன்னிலையில் உள்ளார். ஜடேஜா பார்வைக்கு மட்டுமே கேப்டன் ஆக இருப்பது மோசமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் நல்ல முறையில் கேப்டன்ஷிப் செய்து வரும் நிலையில் ஜடேஜா மட்டும் தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களுக்கு வேதனை அளிக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here