அடேங்கப்பா… மளமளவென சுவிஸ் வங்கிகளில் அதிகரித்த இந்தியர்களின் பணம்..எவ்வளவு தெரியுமா???

0

சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணமதிப்பு ரூ. 20,706 கோடி ஆக உள்ளது.

பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தங்களது சொத்துகளுக்கு அவர்களது சொந்த நாட்டில் வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்வது படிப்படியாக குறைந்துவந்தது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து சென்ற ஆண்டிற்கான விவரங்களை, சுவிஸ் தேசிய வங்கி நேற்று வெளியிட்டுள்ளது.அந்த தகவல்களின்படி சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு கடந்த ஆண்டு ரூ.20,706 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இந்த தொகை ரூ. 6,625 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் இந்த தொகை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here