குக் வித் கோமாளி பிரபலம் இந்த முக்கிய சீரியலில் நடித்தவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான தர்ஷா குப்தா முதன்முதலில் அறிமுகமான சீரியல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் கோமாளி நிகழ்ச்சி தான் விஜய் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங்கில் தூக்கி விட்டது. எதார்த்தமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. புகழ், மணிமேகலை, ஷிவாங்கி பாலா என அனைவரின் கலாட்டாக்களும்  பட்டையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது சீசன் அதனை விட பிரபலமானது.

இந்த சீசனில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அஸ்வின், பவித்ரா, தர்ஷா என அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். தர்ஷா குப்தா ஏற்கனவே போட்டோஷூட் மூலம் பிரபலமானவர். பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் தற்போது கூட லாக்டவுனில் கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இதுவே இவருக்கு கிடைத்த வெற்றி. இன்ஸ்டாவில் விதவிதமான ரீல்ஸ், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். தற்போது இதுவரையிலும் இவரை பற்றி தெரியாத விசயம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஜீ தமிழில் இவர் பிரபலமாக ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியலில் நாயகியாக நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here