இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பிப்ரவரி மாத full schedule இதோ!!

0
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பிப்ரவரி மாத full schedule இதோ!!
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பிப்ரவரி மாத full schedule இதோ!!

இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்கள் இந்த மாதத்தில் விளையாட உள்ள சர்வதேச தொடர்கள் குறித்து காணலாம்.

full schedule:

விளையாட்டு துறையில், இந்தியா வீரர்கள் பலர் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகின்றன. கடந்த மாதம், உலக கோப்பை ஹாக்கி, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் என கவனம் செலுத்தி வந்த இந்திய வீரர்கள், இந்த மாதத்திலும் பல தொடர்களில் பங்கு பெற்று பதக்கங்களை வெல்ல தயாராகி வருகின்றன. இந்த மாதத்தில் இந்திய வீரர்கள் பங்கு பெற உள்ள தொடர்கள் குறித்து விரிவாக பின்வருமாறு காணலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் மல்யுத்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்களான பஜ்ரங் புனியா, ரவி தஹியா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை தொடர்ந்து, பேட்மிண்டனில், தாய்லாந்து தொடர் 5ம் தேதி வரையிலும், ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் தொடர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு…, முதலிடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!

இந்த தொடர்களில், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான, பி வி சிந்து, லக்ஷ்யா சென், எச்.எஸ்.பிரணாய், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, ட்ரீஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் பங்குபெற உள்ளனர். மேலும், இந்த மாதத்தில், டேபிள் டென்னிஸ், ஹேண்ட்பால், கோல்ப், ஃபென்சிங் (வாள் வீச்சு) மற்றும் டென்னிஸில் டேவிஸ் கோப்பை ஆகியவை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here