ஆஸ்திரேலிய அணியை ஏமாற்றும் இந்தியா.., பாரபட்சம் பார்க்கிறது என உஸ்மான் கவாஜா ஆவேசம்!!!

0
ஆஸ்திரேலிய அணியை ஏமாற்றும் இந்தியா.., பாரபட்சம் பார்க்கிறது என உஸ்மான் கவாஜா ஆவேசம்!!!

இந்தியா, நியூசிலாந்து அணிகளின் T20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிகளின் டெஸ்ட் தொடர் உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ள இந்த தொடரில் வெற்றி கட்டாயமாகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இந்த தொடர் உள்ளது. மறுபுறம் இந்தியாவிற்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால் பதிலடி கொடுக்க காத்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தும் பயிற்சி ஆட்டம் எங்களுக்கு தேவையில்லை என ஆஸ்திரேலிய அணி முடிவு எடுத்துள்ளது.

ஐசிசி T20 தரவரிசை: முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியாவின் தீப்தி சர்மா!!

அதாவது “பயிற்சியின் போது புற்கள் நிறைந்த பிட்ச்-ம், போட்டியின் போது புற்கள் இல்லாத பிட்ச்-ம் எங்களுக்கு வழங்கப்படுகிறது என ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். இதனால் இனியும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நம்ப மாட்டோம். எங்களுக்கான பயிற்சி களத்தை நாங்களே உருவாக்கி பயிற்சி பெற்றுள்ளோம்.” என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here