ஐசிசி T20 தரவரிசை: முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியாவின் தீப்தி சர்மா!!

0
ஐசிசி T20 தரவரிசை: முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியாவின் தீப்தி சர்மா!!
ஐசிசி T20 தரவரிசை: முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியாவின் தீப்தி சர்மா!!

மகளிருக்கான ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா முன்னேற்றம் அடைந்ததுடன், முதலிடத்தை எதிர்நோக்கி உள்ளார்.

ஐசிசி தரவரிசை:

இந்திய மகளிர் அணியானது டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு தொடரில், இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், பவுலர்களுக்கான தரவரிசையில், முத்தரப்பு தொடரின் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் தீப்தி சர்மா 2 இடங்கள் முன்னேறி 737 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல, இந்தியாவின் ராஜேஸ்வரி கெயக்வாட் 7 இடங்கள் முன்னேறி 14 வது இடத்தை எட்டி உள்ளார்.

தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனி…, 5வது முறையாக CSK வுக்கு பட்டத்தை வென்று கொடுப்பதே இலக்கா??

டி20யின் பேட்டிங்கான தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா (731), ஷஃபாலி வர்மா (629), ஹர்மன்பிரீத் கவுர் (612) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (610) புள்ளிகளுடன் 3, 8, 12 மற்றும் 13 வது இடத்தை தக்கவைத்துள்ளனர். டி20யின் ஆல் ரவுண்டருக்கான தரவரிசையிலும், இந்தியாவின் தீப்தி சர்மா 401 புள்ளிகளுடன் 2வது தக்கவைத்துள்ளார். இந்த தரவரிசையில் T20 உலக கோப்பைக்கு பின் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here