ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா…, ஒரு கோலால் மாறிய ஆட்டம்!!

0
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..., ஒரு கோலால் மாறிய ஆட்டம்!!
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..., ஒரு கோலால் மாறிய ஆட்டம்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IND vs AUS:

சர்வதேச இந்திய ஹாக்கி அணியானது, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி, ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் விளையாடியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், ஆரம்ப முதலே வேகம் காட்டிய ஆஸ்திரேலிய அணி வீரர் 5 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 8 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனை தொடர்ந்து, இரு அணியினரும் வேகம் காட்ட, முதல் ஆட்ட நேர முடிவில், 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு தான் என்ன?? PCB வெளியிட்ட அப்டேட்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் முழு ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினர். இதனால், போட்டி நேர முடிவில் இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்த போட்டியில், இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 2 கோல்களையும், ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலும் அடித்திருந்தனர். இதனை தொடர்ந்து, 2 வது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here