இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு தான் என்ன?? PCB வெளியிட்ட அப்டேட்!!

0
இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு தான் என்ன?? PCB வெளியிட்ட அப்டேட்!!
இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு தான் என்ன?? PCB வெளியிட்ட அப்டேட்!!

இந்திய அணி அடுத்த வருடம் ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்லுமா என்ற கேள்வி இரு நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான்:

ஆசிய கோப்பை தொடரானது, அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா முன்பு கூறியிருந்தார். இந்த கருத்தானது, இரு நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது குறித்து விரைவில், தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயை எச்சரித்தது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்கிய பிசிசிஐ?? T20 உலக கோப்பையை வெல்லாததால் எடுத்த அதிரடி முடிவு!!

அதாவது, இந்திய அணி ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் வரவில்லை என்றால், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியா செல்லாது என தெரிவித்துள்ளார். இதற்கு பிசிசியானது என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களுக்கும் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here