ஸ்டேடியத்தில் கோட்டை விடுவதில் இந்தியா முதலிடம்.., இப்படியே போன உலக கோப்பை என்ன ஆகுறது?

0
ஸ்டேடியத்தில் கோட்டை விடுவதில் இந்தியா முதலிடம்.., இப்படியே போன உலக கோப்பை என்ன ஆகுறது?
ஸ்டேடியத்தில் கோட்டை விடுவதில் இந்தியா முதலிடம்.., இப்படியே போன உலக கோப்பை என்ன ஆகுறது?

இந்திய அணி தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பையில் முதல் சறுக்களை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை தொடர்ந்தால் உலகக் கோப்பையில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு கேள்விக்குறியாக உள்ளது.

உலக கோப்பையில் செய்யப்போவது என்ன?

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு அடுத்த வெற்றிக்காக தீவிர பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததற்கு இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் மிக முக்கிய காரணமாக உள்ளனர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக ஆடி எதிரணிக்கு அதிக இலக்கை நிர்ணயித்தனர். ஆனால் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி விக்கெட் எடுக்க முடியாமல் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தவற விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ் குமார் ஆகிய இருவருக்கும் பேட்ஸ்மேன்கள் அடித்த பந்தை கேட்ச் பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் கையில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் இரு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ள தவறவிட்டனர். இதனால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2022 இல் மட்டும் இந்திய அணி சந்தித்த சர்வதேச T20 போட்டிகளில் 133 முறை இந்திய அணி வீரர்களின் கையில் தானாகவே கேட்ச் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த தவறிய இந்திய வீரர்கள் 32 வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் கேட்ச் தவறவிடுவதில் இந்திய அணி தான் தற்போது முதலிடத்தில் இருந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்காமல் இது போன்ற செயல்களில் முதலிடத்தில் இருப்பது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று பந்து வீச்சாளர்கள் அனைவரும் அடுத்தடுத்த போட்டிகளில் செய்து வந்தால் T20 உலக கோப்பையில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருக்கும்.

மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் அனைத்தும் பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் அருமையான அளவில் கை கொடுக்கும். எனவே வீரர்கள் அனைவரும் ஒரு நிமிடமாவது யோசித்து ஆடினால் மட்டுமே இனி வரும் போட்டிகளில் எதிரணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற முடியும். இதனால் இந்திய அணி தற்போது உஷாராக வேண்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில் அடுத்து நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி செய்த தவறுகளை திருத்தி கொள்ளுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here