இக்கட்டான சூழ்நிலையில் இளம் வீரருக்கு விராட் உதவி.., உங்க மனசு தான் கடவுள்! பாராட்டிய ரசிகர்கள்.!

0
இளம் வீரருக்கு அட்வைஸ் செய்யும் விராட் - அத நீங்க பன்னிருந்த வேற லெவல்ல இருந்திருக்கும் போங்க!
இளம் வீரருக்கு அட்வைஸ் செய்யும் விராட் - அத நீங்க பன்னிருந்த வேற லெவல்ல இருந்திருக்கும் போங்க!

ஆசிய கோப்பை தொடரில் இளம் வீரரான அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்கு அனைவரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலி அவருக்கு ஆதரவாக பேசி பேசியுள்ளார்.

இந்திய வீரர் செய்த தவறு!

இந்திய அணி 8 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆசிய கோப்பை போட்டியில் தீவிரமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிக்காக போராடிய இந்திய அணி கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்த போதிலும், பந்து வீச்சாளர்கள் செய்த சிறு சிறு தவறால் இந்த தோல்வி இந்திய அணிக்கு கிடைத்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் செய்த மிகப்பெரிய தவறு இந்திய அணியை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றது. அதாவது அவர் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி அடித்த பந்து எளிதாக அர்ஷ்தீப் சிங் கையில் கேட்ச் ஆக விழுந்தது. ஆனால் அதை காப்பாற்றிக்கொள்ள தவறிய அர்ஷ்தீப் சிங் அந்த கேட்சை தவறவிட்டதே இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக மாறிவிட்டது. இவர் செய்த தவறுக்கு இந்திய ரசிகர்கள் அனைவரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி அர்ஷ்தீப் சிங் ஆதரவாக பேட்டி அளித்துள்ளார். அதாவது விராட் கூறுகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மிக முக்கிய போட்டி என்பதால் அனைத்து வீரர்களுக்கும் அழுத்தமாக இருந்தது. இந்த பிரஷரால் ஒரு சில வீரர்கள் தவறு செய்வதை இயல்பு தான். நானே இது போன்ற பல தவறுகளை செய்து உங்களிடம் திட்டு வாங்கியுள்ளேன். அதனால் அவர் ஏதோ தவறுதலாக பந்தை பிடிக்காமல் விட்டார். இதனால் அவரை அனைவரும் விமர்சனம் செய்வது சரியான பாதைக்கு வழி வகுக்காது என விராட் கோலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here