நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றிய சீமான் – குடும்பத்தினருடன் சேர்ந்து செய்த முக்கிய காரியம்!!

0
நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றிய சீமான் - குடும்பத்தினருடன் சேர்ந்து செய்த முக்கிய காரியம்!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது நீண்ட நாள் வேண்டுதலை குடும்பத்துடன், சென்று நிறைவேற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வேண்டுதலை முடித்த சீமான்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரும், இயக்குனருமாக வலம் வந்தவர் சீமான். ஈழத் தமிழரின் பிரச்சனையை, தொடர்ந்து தனது குரல் மூலம் பதிவு செய்து வரும் சீமான், விடுதலைப்புலி  அமைப்பின் தலைவர் பிரபாகரனை தனது அரசியல் குருவாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, தமிழகத்தின் அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறார்.

தற்போது இவர் தனது மகன், மாவீரன் பிரபாகரனுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கையும், பச்சரிசி மற்றும் வெல்லம் என துலாபாரத்திற்கு கொடுத்தும் தனது நீண்ட நாள் வேண்டுதலை  நிறைவேற்றி உள்ளார். சீமான் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலில், சுவாமி தரிசனம் செய்யும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here