“பல கேப்டன்கள் மாறினாலும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை”…, கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

0
"பல கேப்டன்கள் மாறினாலும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை"..., கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சஞ்சு சாம்சன் இடம் பெறாததே அடுத்து ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன.

சஞ்சு சாம்சன்:

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டது. இதன்படி, தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, 3 வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த 3 வது, 4 வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐயானது சமீபத்தில் அறிவித்தது. இதில், டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில், முதல் 2 போட்டியில் இருந்த வீரர்களை பெரும்பாலும் உள்ளனர். ஆனால், ஒருநாள் தொடருக்கான அணியில் தான் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், குறிப்பாக இலங்கைக்கு எதிரான தொடரில், காயம் காரணமாக விலகிய சஞ்சு சாம்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கிளம்பிய ஆஸ்திரேலியா கேப்டன்…, 3வது டெஸ்ட் போட்டிக்குள் அணிக்கு திரும்புவாரா??

ஆனால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை. மாறாக, கடந்த 2013ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஜெய்தேவ் உனத்கட், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐக்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றன. இதில் குறிப்பாக, வெளிநாட்டு லீக் தொடரிலாவது சஞ்சு சாம்சனை விளையாட அனுமதியுங்கள் என்றும், கேப்டன்கள் மாறினாலும் இந்திய அணியில் சஞ்சுக்கு இடம் இருக்காது என்றும் பலர் தெரிவித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here