பயத்தில் விளையாட திணறும் இந்தியா- சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.., என்னவா இருக்கும்?

0
பயத்தில் விளையாட திணறும் இந்தியா- சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.., என்னவா இருக்கும்?
பயத்தில் விளையாட திணறும் இந்தியா- சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.., என்னவா இருக்கும்?

ஆசிய கோப்பை தொடர் துபாயில் நடந்து வரும் நிலையில் இந்திய அணிக்கு சார்ஜாவில் உள்ள மைதானத்தில் விளையாட பயமாக உள்ளதால் தான் விளையாடவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஆசிய கோப்பை 2022:

ஆசிய கோப்பை தொடருக்கான தகுதி சுற்றின் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சிகந்தர் பாக் இந்திய அணியை சீண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து போட்டிகளும் துபாய் சர்வதேச மைதானம் மற்றும் சார்ஜா ஆகிய இரு இடங்களில் நடைபெற்று வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆனால் இந்திய அணி இதுவரை விளையாடிய போட்டிகளும், இனி விளையாடப் போற போட்டியும் துபாய் சர்வதேச மைதானத்தில் மட்டும் விளையாட உள்ளது. இதனால் இந்திய அணிக்கு ஷார்ஜா மைதானத்தில் விளையாட பயமாக உள்ளதால் தான் அந்த மைதானத்தில் விளையாட வில்லை என பாகிஸ்தான் வீரர் சிகந்தர் பாக் கூறியுள்ளார். மேலும் முதலில் இந்திய அணிக்கான போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் தான் நடைபெறுவதாக அட்டவணை பட்டியல் வெளியாகியது. ஆனால் அதன் பின்னர் அனைத்து போட்டிகளும் துபாய் சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் இந்திய அணி துபாய் சர்வதேச மைதானத்தில் தான் விளையாட வேண்டும் என தெரிவித்ததால் தான் அட்டவணையை மாற்றியதாக சிலர் கூறி வருகின்றதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். இவர் இதுபோன்று கூறியது தற்போது இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளது. மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வழிகளை தேடாமல் இது போன்ற கருத்துக்களை பாகிஸ்தான் அணி வீரர்களும், முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருவது சரியில்லை என சில கிரிக்கெட் வட்டாரங்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here