அமெரிக்க ஓபன் டென்னிஸ் – அடுத்த சுற்றுக்கு முன்னேறிய டென்னிஸ் ஜாம்பவான் நடால்!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் -  அடுத்த சுற்றுக்கு முன்னேறிய டென்னிஸ் ஜாம்பவான் நடால்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் -  அடுத்த சுற்றுக்கு முன்னேறிய டென்னிஸ் ஜாம்பவான் நடால்!

தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.

நட்சத்திர வீரர் நடால்!

இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல டென்னிஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடி அசத்தி வருகின்றனர். இதில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரபெல் நடால், பிரான்சை சேர்ந்த ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர் கொண்டார். இந்த இரு வீரர்களும் தொடக்கத்தில் இருந்து வெற்றிக்காக கடுமையாக போராடி வந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் நட்சத்திர வீரர் அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் 6-0 , 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி வெற்றியை தனதாக்கி கொண்டார். இதன் மூலம் 4 வது சுற்றுக்கு முன்னேறிய நடால் 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்க உள்ளார். இதே போன்று நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவை சேர்ந்த லாரன் டோ விசை எதிர்கொண்டார். இதில் இகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here