இந்தியாவில் மூக்கு வழியே போடப்படும் கோவாக்சின் தடுப்பு மருந்து – 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி!!

0

இந்தியாவில் மூக்கு வழியே செலுத்தப்படும், கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

 சோதனைக்கு அனுமதி :

இந்தியாவில் கொரோனா  வைரஸுக்கு எதிராக, கோவாக்ஸின், கோவி சீல்டு மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 60 வயது கடந்தவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த சில தினங்களாக இந்தத் தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தற்போது தொடங்கியுள்ளது.

ஊசி உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் நேரடியாக மூக்கு வழியாக, இந்த மருந்துகள் செலுத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ், நாசித் துவாரம் வழியாக உள்ளே நுழைந்து நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதால், மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து மிகுந்த பலன் தருவதாக பாரத் பயோடெக் தெரிவித்தது.

இந்த தடுப்பு மருந்தை செலுத்த, சுகாதார பணியாளர்கள் தேவை இல்லை எனவும், இது மிகவும் எளிதாக பயன்படுத்தும் தடுப்பு மருந்து எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது, இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து எப்போது நடைமுறைக்கு வரும் என்பது, இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here