இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் குறிப்பிட்ட அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இன்று வரை 59,662 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 95 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 1981 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,847 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 731 பேர் உயிரிழந்து உள்ளனர்.
டாப் 7 கொரோனா பாதித்த மாநிலங்கள்:
- மஹாராஷ்டிரா – 19,063 பேர்
- குஜராத் – 7,402 பேர்
- டெல்லி – 6,318 பேர்
- தமிழ்நாடு – 6,009 பேர்
- ராஜஸ்தான் – 3,579 பேர்
- மத்தியப்பிரதேசம் – 3,341 பேர்
- உத்திரப்பிரதேசம் – 3,214 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |