இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 95,735 பேருக்கு தொற்று உறுதி!!

0
Coronavirus-in-India
Coronavirus-in-India

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 95,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் உயிரிழந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,465,863 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 1,172 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 75,063 ஆக அதிகரித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணி நேரத்தில் 72,939 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 34,71,783 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாகா இந்தியா மாறியுள்ளது. நாட்டில் டிஸ்சார்ஜ் விகிதம் 77.7 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் இறப்பு விகிதங்களை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு – வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு!!

இன்று வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 5,29,34,433 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 11.29 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here