உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் – இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..!

0

2019ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய கணக்கெடுப்பில் முன்னிலையில் இருந்த பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை இந்தியா முந்தி உள்ளது.

ஜப்பான், ஜெர்மனியை விடவும் அதிகம்..!

வேர்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் பொருளாதாரத்தில் பெரிய நாடுகளாக உள்ளவற்றின் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மார்ச் 31க்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள் – இல்லைனா செல்லாது..!

இங்கிலாந்து 2.83 டிரில்லியன் டாலர்களுடனும், பிரான்ஸ் 2.71 டிரில்லியன் டாலர்களுடனும் பின்தங்கி உள்ளன. திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறி வருகிறது. மேலும் வாங்கும் திறன் சமநிலையில் (பிபிபி) இந்தியாவின் ஜிடிபி 10.51 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது. இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி இந்த ஆண்டு குறையும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here