ஆயுதங்களை குவிக்கும் இந்திய & சீன ராணுவம் – லடாக்கில் உச்சகட்ட பதற்றம்..!

0
Ladakh Border
Ladakh Border

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தனது ராணுவ படைகளை இமயமலையில் பலப்படுத்துவதால் அங்கு பதற்ற நிலையானது அதிகரித்து நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா – சீனா லடாக் எல்லை பிரச்சனை

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை வாங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடியாத நிலையில் இந்தியா சீனா எல்லை சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது.இந்தியா – சீனா ஆனா லடாக் எல்லை பிரச்சனை கடந்த 25 நாட்களாக இருந்து வருகின்றன இந்த நிலையில் சர்ச்சைக்குரிய லடாக்கில் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன ராணுவத்தினர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன

இருநாட்டு  ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பதற்றத்தை தணிக்க இந்தியா சீனாவின் இரு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர் ஆனால் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் காஷ்மீர் முதல் லடாக் எல்லை வரை  படைகளும் ஆயுதங்களை அதிகரித்து குவிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.இந்திய சீன இராணுவம் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட போர் கனரக உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கிழக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதியில் குவித்து வருகின்றன.இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பதற்றத்தை தணிப்பதற்கான தூதரக ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா கூறி இருக்கிறது. இதேபோல் இந்திய தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பீரங்கி, காலாட்படை போர் வாகனங்கள் மற்றும் கனரக இராணுவ உபகரணங்களை சீன இராணுவம் உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது கிழக்கு லடாக்கில் உள்ள தனது பகுதி அருகே குவித்து உள்ளது.

இந்திய இராணுவம் கூடுதல் ராணுவ வீரர்களையும், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவித்து வருகிறது.சீன இராணுவம் பாங்கோங் த்சோ மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் சுமார் 2,500 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளதாகவும், படிப்படியாக தற்காலிக உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதங்களை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here