குறைந்த எடை கொண்ட புதிய சிலிண்டர் அறிமுகம்., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!!

0
குறைந்த எடை கொண்ட புதிய சிலிண்டர் அறிமுகம்., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!!
குறைந்த எடை கொண்ட புதிய சிலிண்டர் அறிமுகம்., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!!

நாடு முழுவதும் வீட்டு பயன்பாடு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு சிலிண்டர்களை இண்டேன், பாரத் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகிறது. இதன் எடை அதிகமாக இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மாற்றுவதற்கு இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இண்டேன் நிறுவனம் புதிய காம்போசிட் சிலிண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சிலிண்டர் 50 சதவீதம் குறைவாக எடை கொண்டுள்ளதால் பெண்களும் எளிதாக கையாளலாம். வெளிப்புறத்தில் அடர்த்தியான பாலி எத்திலீன் தெர்மோ பிளாஸ்டிக்கால் உறுதி தன்மையுடன் உள்ளதால் வாயு கசிவு விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கேஸ் அளவு குறித்தும் பார்த்து கொள்ளலாம்.

கோல் மழை பொழிந்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா…, ஆசிய கோப்பையில் கெத்து காட்டி அசத்தல்!!

இந்த புதிய காம்போசிட் சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஏற்கனவே இண்டேன் சிலிண்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முன்பு கட்டிய வைப்பு தொகையில் வித்தியாசம் எவ்வளவு உள்ளதோ? அதனை செலுத்தி பெற்று கொள்ளலாம். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 86556 77255 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் என இண்டேன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here