IND vs SL ODI: இலங்கைக்கு எதிராக பும்ரா களமிறங்குவதில் திடீர் சிக்கல்!!

0
IND vs SL ODI: இலங்கைக்கு எதிராக பும்ரா களமிறங்குவதில் திடீர் சிக்கல்!!
IND vs SL ODI: இலங்கைக்கு எதிராக பும்ரா களமிறங்குவதில் திடீர் சிக்கல்!!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வீரர் பும்ரா, களமிறங்கி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பும்ரா:

இந்திய அணி நாளை முதல் இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்த உள்ளார். இதற்கான அணியில், விராட் கோலி, கே எல் ராகுல் மற்றும் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்ப உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், குறிப்பாக பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான பும்ரா, இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பும்ரா அணியில் இடம் பெற்றாலும் கூட பிளேயிங் லெவனில் களமிறங்க மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலேசிய ஓபனில் ஜொலிக்க காத்திருக்கும் பி வி சிந்து உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள்…, வெற்றியுடன் தொடங்குவார்களா??

அதாவது, முதுகு வலி காயத்தில் இருந்து மீண்டு உள்ள பும்ராவை உடனே களமிறங்குவது சரியாக இருக்காது என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளது. மேலும், அடுத்தடுத்து இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த, தொடர்களில் பும்ரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here