மலேசிய ஓபனில் ஜொலிக்க காத்திருக்கும் பி வி சிந்து உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள்…, வெற்றியுடன் தொடங்குவார்களா??

0
மலேசிய ஓபனில் ஜொலிக்க காத்திருக்கும் பி வி சிந்து உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள்..., வெற்றியுடன் தொடங்குவார்களா??
மலேசிய ஓபனில் ஜொலிக்க காத்திருக்கும் பி வி சிந்து உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள்..., வெற்றியுடன் தொடங்குவார்களா??

நாளை முதல் தொடங்க உள்ள மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.

மலேசிய ஓபன்:

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில், உலகில் உள்ள பல்வேறு வீரர்கள், பல ஓபன் தொடர்களில் பங்கு பெற்று வருகின்றன. இந்த வகையில், நாளை முதல் தொடங்க உள்ள மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பங்கு பெற உள்ளன.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.., இந்த ஆண்டும் சாதனை படைப்பேன்.., பளீச் பேட்டி!!!

இதில், இந்தியாவின் முன்னணி வீரர்களான, பி வி சிந்து, H S பிரணாய், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பங்குபெற உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த ஓபன் தொடரில் பதக்கத்துடன் நாடு திரும்புவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், பி வி சிந்து கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பல மாதங்களாக ஓய்வில் இருந்தார். இந்த காயத்தால், BWF யின் இறுதி போட்டியில் கூட பி வி சிந்து பங்கு பெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, நாளை களமிறங்க இருக்கும் பி வி சிந்து, ஸ்பானிஷின் கரோலினா மரினை எதிர்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்திய ரசிகர்களிடையே பி வி சிந்து மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here