2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா…, பவுலர்களை புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா!!

0
2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா..., பவுலர்களை புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா!!
2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா..., பவுலர்களை புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா!!

இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

IND vs SL:

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களில் இஷான் கிஷன் அதிரடி காட்ட, சுப்மன் கில் (7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5), என அடுத்தடுத்து வெளியேறினர். மறுபுறம் அதிரடி கட்டிய இஷான் கிஷன் (37), ஹர்திக் பாண்டியா (29) என அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தி பெவிலியன் திரும்பினார். இதன் பின், தீவிரமாக விளையாடிய தீபக் ஹூடா 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 41*, அக்சார் படேல் 31* ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்திருந்தது.

Ind vs SL Series: இந்தியாவுடன் எப்போதுமே சவால் தான்.., இலங்கை கேப்டன் பகீர் அறிவிப்பு!!!

இந்த இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்தியாவின் சிவா மாவி, உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரின் அபாரமான பந்து வீச்சால், 160 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரிலான வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து, இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இளம் பந்து வீச்சாளர்கள் அணியை தோல்வியிலிருந்து அற்புதமாக மீட்டு விட்டனர் என்று பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here