IND vs NZ T20: தொடரை வென்ற இந்தியா…, DLS முறையால் டையான 3 வது போட்டி!!

0
IND vs NZ T20: தொடரை வென்ற இந்தியா..., DLS முறையால் டையான 3 வது போட்டி!!
IND vs NZ T20: தொடரை வென்ற இந்தியா..., DLS முறையால் டையான 3 வது போட்டி!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி, மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு DLS முறைப்படி டை ஆனது. இதன் மூலம், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

IND vs NZ:

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய, நியூசிலாந்து வீரர்களில், ஃபின் ஆலன் 3, மார்க் சாப்மேன் 12 ரன்களில் வெளியேற, டெவோன் கான்வே மற்றும் க்ளென் பிலிப்ஸ் அதிரடி காட்ட தொடங்கினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், நியூசிலாந்து அணியின் ஸ்கோரும் உயர தொடங்கியது. ஒரு கட்டத்தில், டெவோன் கான்வே 59, க்ளென் பிலிப்ஸ் 54 என பெவிலியன் திரும்ப, பின் வந்த வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் 160 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா சார்பாக, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

இரண்டரை ஆண்டுக்கு பிறகு சதம் அடித்த டேவிட் வார்னர்…, மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இஷான் கிஷன் 10, ரிஷப் பந்த் 11, சூர்யகுமார் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என வெளியேற, ஹர்திக் பாண்டியா 30*, தீபக் ஹூடா 9* ரன்களுடன் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால், போட்டியானது, DLS முறைப்படி டை ஆனது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1ல் வெற்றி 1ல் டை செய்து தொடரை கைப்பற்றியது. 3 வது போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாகவும், தொடரின் நாயகனாக சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here