இரண்டரை ஆண்டுக்கு பிறகு சதம் அடித்த டேவிட் வார்னர்…, மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??

0
இரண்டரை ஆண்டுக்கு பிறகு சதம் அடித்த டேவிட் வார்னர்..., மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??
இரண்டரை ஆண்டுக்கு பிறகு சதம் அடித்த டேவிட் வார்னர்..., மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பல மாதங்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் பிறகு இவர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

டேவிட் வார்னர்:

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இதனை தொடர்ந்து, இன்று தொடரை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்து அசத்தி இருந்தனர். இதில், டிராவிஸ் ஹெட் 16 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 152 ரன்கள் எடுத்திருந்தார். இவரை போல, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு (1042 நாட்கள்) பிறகு டேவிட் வார்னர் சர்வதேச அளவில் சதம் அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா படை அறிவிப்பு…, அணி விவரம் உள்ளே!!

இவர், 102 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர் 106 ரன்களை அடித்து ஒல்லி ஸ்டோன் பந்தில் டேவிட் வில்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் பெவிலியன் திரும்பும் போது, தனது கையுறைகளை, விளையாட காண வந்த இளம் ரசிகரிடம் கொடுத்தார். இதனை பெற்ற அந்த ரசிகர் உற்சாகம் அடைந்தார். டேவிட் வார்னர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் தொடரில், 6007 ரன்கள் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here