
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லாத நேரத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக சீனியர் வீரர் ஒருவர் செயல்பட்டுள்ளார்.
துணை கேப்டன்:
பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்டில், இந்திய அணி துணை கேப்டன் இல்லாமல் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களுக்கு அதிக நெருக்கடியை கொடுத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், உஸ்மான் கவாஜா 180, கேமரூன் கிரீன் 114 என சதம் அடித்து விளாசி அசத்தினர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த இந்திய பவுலர்கள் கடுமையாக போராடினார். ஒரு கட்டத்தில், அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் இவர்களது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இன்று நடைபெற்ற 2ம் நாளில் மாலை நேர தேநீர் இடைவேளையின் போது, கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்திற்கு வர சற்று தாமதமானது.
இந்த நேரத்தில், இந்திய அணியின் சீனியர் வீரரான சேதேஷ்வர் புஜாரா அணியை வழி நடத்தி உள்ளார். இதன் மூலம், இந்திய அணியின் துணை கேப்டனாக புஜாரா மறைமுக செயல்பட்டுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் 2 டெஸ்டில் கே எல் ராகுல் துணை கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.