
ஆஸ்திரேலிய அணியானது தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
IND vs AUS:
பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோதி வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, இன்று தொடங்கிய ஆட்டத்தில், உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்களது பார்ட்னர்ஷிப்பை அஸ்வின், கேமரூன் கிரீன் (114 ரன்கள்) வீழ்த்தி பிரித்தார். மேலும், அலெக்ஸ் கேரி (0), மிட்செல் ஸ்டார்க் (6) இவர்களையும் அஸ்வின் வீழ்த்தினார். இவர்களை தொடர்ந்து, நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடிய உஸ்மான் கவாஜாவை (180) அக்சார் பட்டேல் தனது சுழலால் வீழ்த்தினார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்திருந்தது. 9 விக்கெட்டுக்கு, ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களான நாதன் லியோன் (34), டாட் மர்பி (41) அதிரடியாக விளையாடினர்.
இதனால், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா சார்பாக அஸ்வின் 6, ஷமி 2, அக்சார் பட்டேல் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா (17*), சுப்மன் கில் (18*) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.