ஜி.வி.பிரகாஷின் மேல்முறையீட்டு வழக்கில் நடந்த திருப்பம்.., வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்!!

0
ஜி.வி.பிரகாஷின் மேல்முறையீட்டு வழக்கில் நடந்த திருப்பம்.., வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்!!
ஜி.வி.பிரகாஷின் மேல்முறையீட்டு வழக்கில் நடந்த திருப்பம்.., வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்!!

வருமானத்துறை மீது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மேல்முறையீட்ட வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் திரையுலகில் தலைவா மதராசபட்டினம் அசுரன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சமயத்தில் இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜிஎஸ்டி இணை ஆணையர், ஜிவி பிரகாஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை எதிர்த்து ஜெய் பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜிஎஸ்டி இணை ஆணையர் ஜிவி பிரகாஷுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதில் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டிருந்தது.

வேண்டாம் என்று மறுத்த விஜய்.., வலுக்கட்டாயமாக செஞ்ச எஸ் ஏ சந்திரசேகர்.., அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

ஆனால் இந்த உத்தரவை ஜிவி பிரகாஷ் குமார் எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகளான மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ் குமார் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது நான்கு வாரங்களில் வருமானத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவரைக்கும் இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here