
தளபதி விஜய் வேண்டாம் என்று சொன்ன விஷயத்தை எஸ் ஏ சந்திரசேகர் செய்தது குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய்க்கு பிள்ளையார் சுழி போட்டவர் தான் எஸ் ஏ சந்திரசேகர். தனது படங்களின் மூலம் விஜய்யை செதுக்க தொடங்கி, பல இயக்குனர்களின் சிற்பியால் முழு உருவத்தையும் செதுக்கியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். இதனை தொடர்ந்து பெல்லி சந்தடி என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய எஸ்.ஏ சந்திரசேகர், விஜய்யை நடிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இது பழைய கதையாக இருக்கிறது என்று விஜய் வேண்டாம் என்று மறுக்க, வலுக்கட்டாயமாக அவரை நடிக்க வைத்தார் சந்திரசேகர். அந்த படம் தான் நினைத்தேன் வந்தாய்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் நடிகர் விஜய் எதிர்பார்க்காத அளவுக்கு அந்த படம் ஹிட் கொடுத்து விஜய்யை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அதேபோல் பவித்ர பந்தம் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை எஸ்.எ.சேகர் வாங்கிய நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் அவரும் இப்படத்தில் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் அதிகம் இருப்பதாகவும் அதனால் நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டாராம். இருப்பினும் விஜய்யை விடாமல் சந்திரசேகர், அதெல்லாம் முடியாது நீ தான் இந்த படத்துல நடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.
ஷைனிங் அழகில் தாறுமாறா தரிசனம் கொடுத்த சாக்ஷி அகர்வால்.., சொக்கி போய் நிக்கும் இளசுகள்!!
இதனைத் தொடர்ந்து தந்தை சொன்னதும் மனதிற்கு பிடிக்காமல் நடித்த படம் தான் பிரியமானவளே. ஆனால் இந்த படம் குடும்ப ஆடியன்ஸை அதிகம் கவர்ந்து மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. இப்படத்திலிருந்து நடிகர் விஜய்க்கு ஃபேமிலி சப்போர்ட் அதிகமாகியது. அப்பா சொன்ன படத்தில் நடித்து ஹிட் ஆனதில் இருந்து, SAC கதையை கேட்ட பின்னரே விஜய் நடிக்க தொடங்கினார். ஒரு அப்பாவுக்கு தெரியாத மகன் எதில் நடித்தால் வெற்றி பெறுவான் என்று. ஆனால் சமீபகாலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.