#INDvsAUS சிட்னி டெஸ்ட் – இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்! 244 ரன்களுக்கு ஆல் அவுட்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்மேன்கள் திணறி வருகிறன்றனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது தங்களது 3வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டி கடந்த 7ம் தேதி சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் பங்கேற்றார். ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் தனது 27வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணி தரப்பில் அசத்தலாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதன்பிறகு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் தனது முதல் அரை சதத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்தார். 50 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவுல் இந்தியா அணி 96 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்திருந்தது.

திணறும் இந்திய அணி:

போட்டியின் மூன்றாவது நாளான இன்று ரஹானே மற்றும் புஜாரா ஆட்டத்தை துவங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரஹானே இந்த போட்டியில் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். புஜாரா அரை சதம் கடந்தார். அதன்பின் அவரும் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் விஹாரி 4, பண்ட் 36, அஸ்வின் 10, சைனி 3, பும்ராஹ் 0 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளனர். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 100.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மின்ஸ் 3 விக்கெட் மற்றும் ஹேசில்வுட் 2 மற்றும் ஸ்டார்க் 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 244\10
ஜடேஜா – 28*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here