திரையரங்குகளில் 50% இருக்கைகள், கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு உத்தரவு!!

0

தமிழகத்தில் திரை அரங்குகளில் 100% இருக்கைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியினை தமிழக அரசு தற்போது திரும்பப்பெற்று உள்ளது. கொரோனா தொற்று அபாயம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திரையரங்குகள் அனுமதி:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கடந்த ஜனவரி 4ம் தேதி திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அதன் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்த போதிலும் தமிழக அரசு 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு மருத்துவர்கள், பொதுமக்கள், நீதிமன்றம் என பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு உத்தரவினை பரிசீலனை செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள் கொண்டு வர தமிழக அரசு தடை!!

மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளை திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே திரை அரங்கங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டால் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும். சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆகாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here