ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 19) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இப்போட்டி நடைபெற உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த பிட்ச் முழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக உள்ளது. குறிப்பாக மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் அதிக பலன் அளிக்கும் என்றும் கருதப்படுகிறது. இங்கே இரவில் பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இரண்டையும் பந்து வீச்சாளர்கள் நன்கு பயன்படுத்த இயலும். ஆனாலும் இந்த பிட்சில் பேட்டிங்கும் நன்றாக எடுபடும். இதனால் இப்போட்டியில் பார்வையாளர்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் பார்க்க முடியும். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.