ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி…, காமன்வெல்த் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்களா??

0
ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..., காமன்வெல்த் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்களா??
ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..., காமன்வெல்த் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்களா??

சர்வதேச மகளிர் அணிகளுக்கான டி20 உலக கோப்பை தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து முதலில் போட்டி போட்டு கொள்ள உள்ளனர். இதனை தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் பிப்ரவரி 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த உலக கோப்பைக்கு முன் இந்திய அணி பயிற்சி பெறும் வகையில், இன்று முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இதற்கு முன் இந்த இரு அணிகளும் கடைசியாக காமன்வெல்த் போட்டியில், தங்கப் பதக்கத்திற்காக மோதினார்.

லேடி சூப்பர் ஸ்டார் நடித்த “Connect” படத்தின் டிரைலர் வெளியீடு.., ட்ரெண்டாகும் வீடியோ!!

இந்த மோதலில் இந்திய அணி தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பெற்ற தோல்விக்கு, இன்று மும்பையில் நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, சப்பினேனி மேகனா, ஹர்மன்பிரீத் கவுர்(C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ்(WK), ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், ரேணுகா சிங், யாஸ்திகா சிங், தேவிகா, மேக்னா பாட்டியா, அஞ்சலி சர்வாணி, வைத்யா.

ஆஸ்திரேலியா பெண்கள் அணி: அலிசா ஹீலி(w/c), பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், எலிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், கிரேஸ் ஹாரிஸ், நிக்கோலா கேரி, அலனா கிங், ஜெஸ் ஜோனாசென், மேகன் ஷட், டார்சி பிரவுன், ஹீதர் கிரஹாம், கிம் கார்த், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here