லேடி சூப்பர் ஸ்டார் நடித்த “Connect” படத்தின் டிரைலர் வெளியீடு.., ட்ரெண்டாகும் வீடியோ!!

0
லேடி சூப்பர் ஸ்டார் நடித்த
லேடி சூப்பர் ஸ்டார் நடித்த "Connect" படத்தின் டிரைலர் வெளியீடு..,ட்ரெண்டாகும் வீடியோ!!

இயக்குனர் அஸ்வின் சரவணன் படைப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கனெக்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கனெக்ட் படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனை தொடர்ந்து ஜவான், கனெக்ட் படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார். இதில் கனெக்ட் திரைப்படம் இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா என்ற ஹிட் படத்தை கொடுத்த அஸ்வின் சரவணன் இயக்குகிறார். அது போக இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம் கெர், வினய், ஹனியா நபிசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கனெக்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. படு திரில்லர் பேய் படமாக இந்த படத்தை எடுத்துள்ளார் அஸ்வின் சரவணன். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழக பள்ளிகளுக்கு சூப்பர் திட்டம்., ரூபாய் 800 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!

இப்படி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை இடைவெளி இல்லாமல் திரையிடத் திட்டமிட்டிருக்கிறோம். திரையரங்குகளுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here