#INDvsENG டெஸ்ட் – ஆன்லைனில் துவங்கிய டிக்கெட் விற்பனை!! குஷியில் ரசிகர்கள்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான வரும் 13ம் தேதி இரண்டாவது டெஸ்ட் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது ஆன்லைனில் டிக்கெட் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது முதலாவதாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி கடந்த 5ம் தேதி அன்று சென்னை மைதானத்தில் வைத்து துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி அன்று துவங்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது போட்டியை ரசிகர்கள் காண்பதற்காக ஆன்லைனில் தற்போது போட்டிக்கான டிக்கட் விற்பனை துவங்கியுள்ளது. இதனை ரசிகர்களில் ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர். 5 நாள் கொண்ட போட்டியென்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.100, 150, 200 என்ற கணக்கில் டிக்கட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் பதிவு மூலம் பெறக்கூடிய ரசீதை வைத்து ரசிகர்கள் போட்டிக்கான டிக்கட்டை பெறலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை – டிடிவி தினகரன் பேட்டி!!

மேலும் டிக்கட்டை பெறவரும் ரசிகர்கள் தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் டிக்கட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் துவங்கியது. ஆன்லைன் டிக்கட்டை ரசிகர்கள் www.paytm.com மற்றும் www.insider.in என்ற இனையதளம் மூலம் பதியலாம் என்று தெரிவவித்துள்ளனர். மேலும் மைதானத்தில் உள்ள கவுண்டரில் டிக்கட் விற்பனை நடைபெறாது என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here