மூன்றே மாதங்களில் ரூ. 44,200 கோடி வருமானம் ஈட்டிய நெட்பிளிக்ஸ்..!

0

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளதால் சினிமா ரசிகர்கள் வீட்டுலே இருந்தே தொலைக்காட்சி, இணையம் வழியே படங்களை பார்த்து வருவதால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் அதிகம் பலனடைந்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் தளம் 22% வளர்ச்சி..!

நெட்பிளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுக்க 18.20 கோடி சந்தாதாரர்கள் உள்ளார்கள். இந்நிலையில் இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் 1.58 கோடி சந்தாதாரர்கள் நெட்பிலிக்ஸில் இணைந்துள்ளனர். இதன் மூலம் 22% வளர்ச்சியை அடைந்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க வணிக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளதால் அதன் வருமானம் பல மடங்கு குறைந்துள்ளது. ஆனால் நெட்பிலிக்ஸில் அந்த நிலை இல்லை. முதல் காலாண்டு வருமானமாக ரூ. 44,223 கோடி கிடைத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் சந்தாதாரர்கள் ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால் டாலரின் மதிப்பு அதிகமானதால் சர்வதேச வருமானம் எதிர்பார்த்ததை விடவும் குறைவு என்று கூறியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here