EPFO & ESIC சந்தாதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கூடுதல் சலுகைகள் அறிமுகம்!

0
EPFO & ESIC சந்தாதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - கூடுதல் சலுகைகள் அறிமுகம்!
EPFO & ESIC சந்தாதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - கூடுதல் சலுகைகள் அறிமுகம்!
EPFO & ESIC சந்தாதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கூடுதல் சலுகைகள் அறிமுகம்!

EPFO & ESIC நிதி அமைப்பு நிறுவனங்கள் சந்தாதாரர்களுக்கு பல சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சந்தாதாரர்களுக்கான கூடுதல் சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளது. அதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO & ESIC:

தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆகிய இரண்டு நிறுவன அமைப்புகளும் தனது சந்தாதாரர்களுக்கு PF மற்றும் உடல்நலக் காப்பீடு போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய பணத்தின் பாதுகாப்பை EPFO உறுதி செய்வது போல ESIC அமைப்பு மாதம் 25 ஆயிரம் வரைக்கும் மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் EPFO மற்றும் ESIC ஆகிய இரண்டு அமைப்புகளும் சந்தாதாரர்களுக்கு பல சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, தற்போது வரைக்கும் ESIC அட்டைதாரர்கள் நாடு முழுவதும் உள்ள ESI மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், தற்போது ESIC கார்டுதாரர்கள் ESI ஆய்வகத்திற்குச் சென்று CT ஸ்கேன், எம்ஆர்ஐ, எக்கோ கார்டியோகிராபி போன்ற ஸ்கேன்களை இலவசமாக செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற விரும்பினால் ESIC இன் அதிகாரபூர்வமான esic.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், EPFO சந்தாதாரர்களுக்கும் சில வசதிகளை EPFO வழங்கியுள்ளது. அதாவது, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் மற்றும் யுனிவர்சல் அக்கவுன்ட் எண் (UAN) மற்றும் அரசாங்கத்தின் இ-லாக்கர் ஆகிய அனைத்து சேவைகளும் DigiLocker மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிஜிலாக்கரில் இருந்து UAN அல்லது PPO எண்ணை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். முதலில், https://digilocker.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று உள்நுழை என்பதை கிளிக் செய்து ஆதார் மற்றும் பயனர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள OTP எண்ணை பதிவு செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், 6 இலக்க பாதுகாப்பு பின்னை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து, Issued Documents என்பதை கிளிக் செய்து Get more issued documents என்பதையும் கிளிக் செய்ய வேண்டும். இதற்கு பிறகு Central Government என்கிற பகுதிக்கு கீழ் உள்ள Employees Provident Fund Organization என்பதை கிளிக் செய்து UAN ஐக் கிளிக் செய்து, UAN எண்ணை பதிவு செய்து Get Document என்பதையும் கிளிக் செய்துவிட்டால் டிஜிலாக்கரில் இருந்து UAN அல்லது PPO எண்ணை பெற்றுவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here