ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய சேவைகள் அறிமுகம்!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - புதிய சேவைகள் அறிமுகம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - புதிய சேவைகள் அறிமுகம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய சேவைகள் அறிமுகம்!

கோவாவில் இருந்து சேலம், ராசிபுரம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு வருகிற 27ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தற்போது எந்தெந்த ரயில்கள் எத்தனை மணிக்கு இயக்கப்பட உள்ளது என்று விரிவாக பார்ப்போம்.

சிறப்பு ரயில்கள்

இந்தியாவில் பொதுவாக ரயில்வே துறை சார்பாக பண்டிகை, திருவிழா, போட்டித்தேர்வு உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. அதனால் வேளாங்கண்ணி கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிவார்கள். ஆதலால் பக்தர்களின் நலன் கருதி வேளாங்கண்ணி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் கோவாவில் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஊர்களின் வழியாக வேளாங்கண்ணிக்கு வருகிற 27ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வரும் வருகிற 27ம் தேதி அன்று வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் (ஆகஸ்ட் 28) காலை 4:05 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அதன்பின்பு அங்கிருந்து 4:10 மணிக்கு புறப்பட்டு ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11:45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு கரூர் வழியாக நாமக்கல், ராசிபுரம், சேலம் வந்தடைகிறது. அதன்பின்பு 6:35 மணிக்கு புறப்பட்டு 30ம் தேதி காலை வாஸ்கோடகாமா சென்றடையும். இதனை தொடர்ந்து வாஸ்கோடகாமாவில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11:55 மணிக்கு சேலம் வந்தடையும். அடுத்ததாக 12:05 மணிக்கு புறப்பட்டு ராசிபுரத்துக்கு 12:24 மணிக்கும், நாமக்கல்லுக்கு 12:49 மணிக்கும் வந்தடையும். இறுதியாக செப்டம்பர் 2ம் தேதி இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here