PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கான வழிமுறை – முக்கிய தகவல் வெளியீடு!

0
PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கான வழிமுறை - முக்கிய தகவல் வெளியீடு!
PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கான வழிமுறை - முக்கிய தகவல் வெளியீடு!
PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கான வழிமுறை – முக்கிய தகவல் வெளியீடு!

PM Kisan திட்டத்தில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்பவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.2000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பயனாளிகளும் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

பி.எம்.கிசான்

இனி வரும் மாதங்களில் ஆதார் எண் இணைப்பை கொண்டவர்களுக்கு மட்டுமே நிதி தொகை வழங்கப்படும் என்ற அறிக்கையை முன்னதாகவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் செயல்பட்டு வருகிற ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் ஆதார் இணைப்பை கொண்டு உறுதி செய்த பின்னரே உதவித்தொகை வழங்கப்படும் என ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் அவர்களும் செய்திக்குறிப்பில் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலமாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை என வருடத்திற்கு மூன்று முறை தலா ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள் பலர் நன்மை அடைகின்றனர். இவ்வாறு விவசாய குடும்பங்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூபாய் 6,000 வரை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒன்றிய அரசு 12வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதாவது, மத்திய அரசு வழிகாட்டுதல் படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, அவர்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே அடுத்த 12 வது தவணை தொகையானது வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here