தமிழகத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளுவோருக்கான முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!

0
தமிழகத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளுவோருக்கான முக்கிய அறிவிப்பு - புதிய வசதி அறிமுகம்!
தமிழகத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளுவோருக்கான முக்கிய அறிவிப்பு - புதிய வசதி அறிமுகம்!
தமிழகத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளுவோருக்கான முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!

பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எந்த கல்லூரியில் படிக்கலாம் என கல்லூரியை தேர்வு செய்வதற்கான புதிய வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய வசதி:

தமிழகத்தில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. மேலும், இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரையிலும், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 21 வரையிலும் நடைபெற இருக்கிறது. இதனிடையே, பிஇ.,பிடெக் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வரும் கல்லூரிகள் எவை எவை?, ஒவ்வொரு ஆண்டும் அந்த கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் என்னவாக இருக்கிறது மற்றும் கடந்த ஆண்டு அந்த கல்லூரியின் கட்-ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தான அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள், தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என்பது குறித்தான அறிவிப்பையும் வெளியிடவுள்ளது. மேலும், கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இந்த விவரங்களை அறிந்துகொள்ள விரும்பினால் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளமான https://www.tneaonline.org/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here