ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – இனி இலவச மானியம் இல்லை? திடீர் முடிவு!

0
ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் - இனி இலவச மானியம் இல்லை? திடீர் முடிவு!
ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் - இனி இலவச மானியம் இல்லை? திடீர் முடிவு!

நீங்கள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) திட்டத்தின் பயனாளியாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்குத்தான். அதாவது செலவினத்துறை பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கும்.

ரேஷன் கார்டு :

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் மானிய விலையிலான உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான ஒரு அடையாள அட்டை தான் ரேஷன் கார்டு. இதன் மூலம் மாதந்தோறும் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களையும், அரசின் பல உதவிகளையும் பெற்று கொள்ள முடியும். குறிப்பாக கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடருக்கு மத்தியில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசமாகவும், கூடுதலாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வந்தனர்.

இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவு பற்றாக்குறை இன்றி வாழ்ந்தனர். ஆனால் தற்போது ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக செலவினத்துறையின் பரிந்துரைப்படி மத்திய அரசு சில சலுகைகளை நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் தற்போது நாட்டின் நிதி சுமையை மேலும் அதிகரித்துள்ளதாக செலவினத்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியும் குறைக்கப்பட்டதால் வருவாயில் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலாக சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், மேலும் நிவாரணம் வழங்கினால் நிதிச்சுமை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என கூறியுள்ளார்கள். எனவே அவர்களது பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசும் கூடிய விரைவில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இத்திட்டம் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நிறுத்தப்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. மேலும், பட்ஜெட்டில் உணவு மானியத்திற்காக மத்திய அரசு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here