இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTCயின் புதிய விதிமுறைகள்!

0
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTCயின் புதிய விதிமுறைகள்!
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTCயின் புதிய விதிமுறைகள்!

இந்தியாவில் ரயில் பயணிகளின் வசதிக்காக ஐஆர்சிடிசி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பயணிகளுக்கான புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்:

இந்தியாவில் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்ததை அடுத்து அனைத்து ரயில்களும், மீண்டும் வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பதிவில்லா ரயில்களையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஐஆர்சிடிசி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் இதில் உங்களின் போட்டிங் பாயின்டையும் மாற்றி கொள்ளலாம். அதனை தொடர்ந்து இரவில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் சக பயணிகளால் அடிக்கடி தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஒரு கும்பலாக சேர்ந்து சத்தமாகப் பேசுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பிற பயணிகளின் தூக்கம் கலைகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

அதாவது இனி சக பயணிகள் மொபைல் போனில் சத்தமாக பேசவோ, சத்தமாக பாடல் கேட்டாலோ பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்று ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. மேலும் புகார் வந்தால் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடியாக உதவி வழங்குவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆர் பி எஃப், எலக்ட்ரீஷியன், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here