ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., பிறந்த குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

0
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., பிறந்த குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் சிலர் திருமணம் முடிந்த உடனே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடுகின்றனர். அதன் பின் குழந்தைகளின் பெயரையும் பிறந்தவுடன் சேர்க்க அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் பிறந்த குழந்தையின் பெயரை இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சேர்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்க்கலாம்.

அதாவது மாநிலத்தின் உணவுத்துறை இணையதளத்திற்கு சென்று “Add member to ration card” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து இறுதியில் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின் விண்ணப்பத்தை “Check Beneficiary Status” ஆகியவற்றின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்றால் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், குடும்ப தலைவரின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டின் நகல் போன்றவை தேவைப்படும். இது அனைத்தும் இருந்தால் வீட்டில் இருந்தபடியே பிறந்த குழந்தையின் பெயரை எளிதாக இணைத்து விடலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here