பெண்கள் T20 உலக கோப்பை.., ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் இதோ!!

0
பெண்கள் T20 உலக கோப்பை.., ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் இதோ!!

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள பெண்கள் உலக கோப்பை பற்றிய முக்கிய அறிவிப்புகளை ICC வெளியிட்டுள்ளது.

மகளிர் உலக கோப்பை

ICC U19 மகளிர் T20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 2023 ஜனவரி 14 முதல் 29 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தோனேஷியா, ருவாண்டா ஆகிய நாடுகள் முதல் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கின்றனர். இந்த 16 அணிகளுக்கு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் லீக் கட்டத்திற்கு முன்னேறும். இந்த அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அனைத்தும் பெனோனி மற்றும் போட்செஃப்ஸ்ட்ரூம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதே இடத்தில் கடந்த 2020 இல் ICC U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் குரூப் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் யூ.ஏ.இ. ஆகிய அணிகளுடன் குரூப் சுற்றில் மோத உள்ளது. இந்த அனைத்து லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here