குடும்ப அட்டைதாரர்களே உஷார் – இதை தெரிஞ்சுக்காம இருந்தா உங்க ரேஷன் கார்டும் ரத்து தான்! அரசு பகீர்!!

0
குடும்ப அட்டைதாரர்களே உஷார் - இதை தெரிஞ்சுக்காம இருந்தா உங்க ரேஷன் கார்டும் ரத்து தான்! அரசு பகீர்!!

நாடு முழுவதும், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 2.41 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் உணவு விநியோகத் துறை இணை அமைச்சர் சக்தி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பகீர்:

நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மத்திய உணவு வழங்கல் துறை வாயிலாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் பயன்பெறுவதற்காக ரேஷன் கார்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் தகுதி இல்லாத பல நபர்கள் ரேஷன் பொருட்களை பெற்று கள்ள சந்தையில் விற்பனை செய்யும், குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, ரேஷன் கார்டு வைத்திருப்பவரின் வருமானம், வசதி போன்றவற்றை அரசு மறுபரிசீலனை செய்து, தகுதி இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2.41 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அரசின் இந்த புதிய விதிமுறையால், இனி தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. இதுகுறித்து பேசிய மத்திய நுகர்வோர் உணவு விநியோக துறை இணை அமைச்சர், இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1.42 கோடி ரேஷன் கார்டுகளும், பீகாரில் 7 லட்சத்துக்கு அதிகமான ரேஷன் கார்டுகளும், மகாராஷ்டிராவில் 21.03 லட்சம் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here