எட்டு ஆண்மகன்களை திருமணம் செய்து ஏமாற்றிய சாதாரண பெண்.., குண்டுகட்டாக தூக்கிய மாப்பிள்ளைகள்.., நடந்தது என்ன?

0
எட்டு ஆண்மகன்களை திருமணம் செய்து ஏமாற்றிய சாதாரண பெண்.., குண்டுகட்டாக தூக்கிய மாப்பிள்ளைகள்.., நடந்தது என்ன?
எட்டு ஆண்மகன்களை திருமணம் செய்து ஏமாற்றிய சாதாரண பெண்.., குண்டுகட்டாக தூக்கிய மாப்பிள்ளைகள்.., நடந்தது என்ன?

என்னை திருமணம் செய்து கொண்டால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  8 ஆண்மகன்களை ஏமாற்றிய பெண் கைது.

பண மோசடி:

ஒரு மனிதர் செய்யும் குற்றங்களை குறைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் ஆங்காங்கே கொலை, கொள்ளை, பாலியல், பணமோசடி தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஒரு பெண் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர்  சபரி (எ) சௌமியா. இவர் மின்சார துறை அமைச்சர் என் உறவினர் என்று கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளார். அது மட்டுமின்றி  அரசு வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை கொடுத்து திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிட்டத்தட்ட  50-க்கும் மேற்பட்டோரிடம் தலா 10 லட்சத்துக்கு மேல் பணம்  வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதே போல் கரூர் மாவட்டம் சிவகுமார் என்பவரிடம் திருமணம் சம்பந்தமாக   பேசியுள்ளார். அதாவது நான் ஏற்கனவே திருமணம் ஆகி தனியாக வாழ்ந்து வருகிறேன், தனக்கு மருமணத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சிவாகுமாரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி  சிவகுமாரின் நண்பர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் பெற்றுள்ளார்.இதனை தொடர்ந்து சிவகுமார்  சௌமியா புகைப்படத்தை சொந்தக்காரர்களிடம் கொடுத்து விசாரிக்க சொன்னார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது  அவர் ஆரம்பத்தில் இருந்ததாக கூறிய இடத்தில் சென்று கேட்டபோது, அந்த மாதிரி பெண் யாரும் இங்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார் உறவினர்கள் அவரை எச்சரித்துள்ளனர். மேலும் சௌமியாவை பற்றி விசாரித்த போது அவர் இதற்கு முன் 8 திருமணங்கள் செய்தவர் என்று சிவகுமாருக்கு தெரிய வந்தது. இது குறித்து சிவகுமார் காவல்துறையிடம் புகார் அளித்தபோது சௌமியா தலைமறைவாகி விட்டார். இதை தொடர்ந்து சௌமியா கரூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது, அங்கிருந்து இழுத்து சென்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம் என்று கூறினார். இந்நிலையில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here