டெஸ்ட் வடிவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா…, ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!!

0
டெஸ்ட் வடிவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா..., ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!!
டெஸ்ட் வடிவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா..., ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!!

ஐசிசியானது, வாரந்தோறும் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடும். இதன்படி, சர்வதேச அணிகள் அனைத்தும் கடந்த வாரம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தியதால், இதற்கான தரவரிசையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோஹித் சர்மா (759), விராட் கோலி (733) என ரேட்டிங் புள்ளிகள் அதிகரித்த நிலையில் 9 மற்றும் 14 வது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் பவுலர்களுக்கான தரவரிசையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை மேற்கொண்ட முகமது சிராஜ் 5 இடங்கள் முன்னேறி 33 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திலும், ஜடேஜா 6 மற்றும் பும்ரா 11 வது இடத்தையும் எட்டியுள்ளனர். மேலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களையும், அக்சார் பட்டேல் 5 வது இடத்தையும் தக்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here