இரு ஜாம்பவானுக்கு இடையே நடந்த போட்டி.., மெஸ்ஸியிடம் வீழ்ந்த ரொனால்டோ…, கெத்து காட்டிய PSG!!

0
இரு ஜாம்பவானுக்கு இடையே நடந்த போட்டி.., மெஸ்ஸியிடம் வீழ்ந்த ரொனால்டோ..., கெத்து காட்டிய PSG!!
இரு ஜாம்பவானுக்கு இடையே நடந்த போட்டி.., மெஸ்ஸியிடம் வீழ்ந்த ரொனால்டோ..., கெத்து காட்டிய PSG!!

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இவர்களின் அணிகளுக்கு இடையே நேற்று நட்பு ரீதியான போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

மெஸ்ஸி vs ரொனால்டோ:

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர்களாக கால்பந்து நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ வலம் வருகின்றன. சமீபத்தில், கத்தாரில் நடந்த உலக கோப்பை தொடரில் இவர்களது, அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் அணி பங்கு பெற்று விளையாடியது. ஆனால், இந்த இரு அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெறவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், நட்பு ரீதியிலாக, மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி சார்பாகவும், ரொனால்டோ ரியாத் XI அணி சார்பாகவும் நேற்று மோதினர். இந்த போட்டியில், மெஸ்ஸி (5வது நிமிடத்தில்) வந்த வேகத்தில் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, ரியாத் XI அணிக்கு 34 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, ரொனால்டோ கோலாக மாற்றினார். இதனால், இரண்டு நட்சத்திர வீரர்களும் தங்களது முதல் கோலை அடித்து அசத்தி இருந்தனர்.

சொந்த மண்ணில் சௌத் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்த இந்தியா.., 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!!!

இதனை தொடர்ந்து, PSG அணியின் கைலியன் எம்பாப்பே உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து 4 கோல்கள் அடித்தனர். இதற்கிடையில், ரியாத் XI அணியின் ரொனால்டோ (45+6′), ஜாங் ஹியூன்-சூ (56′) மற்றும் தாலிஸ்கா (90+4′) ஆகியோரும் கோல்களை அடித்து வெற்றிக்காக போராடினார். ஆனால், ஆட்டத்தின் இறுதியில், ரொனால்டோ அணியானது 4-5 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸி அணியிடம் தோல்வியை தழுவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here