மணக்க மணக்க ‘கருவாட்டு மசாலா’ ரெசிபி – கிராமத்து விருந்து!!

0
karuvadu

கருவாடு என்றாலே நாக்கில் எச்சில் ஊரும். கருவாடு யாருக்குத்தான் பிடிக்காது வாசனை தான் சிலருக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனால், சமைத்த பிறகு சாப்பிடாம இருக்க மாட்டாங்க. சில குழந்தைகள் கருவாட்டு குழம்பா எனக்கு பிடிக்காது நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறார்களா இனி இப்படி செஞ்சு கொடுங்க. இனி எப்போமா கருவாடு செய்வனு கேப்பாங்க. கருவாடு நம் உடம்புக்கு ரொம்பவே நல்லதுங்க. அசைவ உணவுகளிலேயே கொழுப்பு சத்து குறைவா இருக்குற உணவு கருவாடு தான். இப்போ நாம வீட்ல இருக்குற எல்லாரையும் கருவாட வச்சு எப்படி கவுக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • துண்டுகளாக நறுக்கிய கருவாடு – 100 கி
  • சின்ன வெங்காயம் – 50 கி
  • பூண்டு – 10 பல்
  • வரமிளகாய் – 10
  • தக்காளி – 1
  • தேங்காய் – 2 துண்டு
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • வெந்தயம், சோம்பு, சீரகம் – சிறிதளவு

செய்முறை:

கருவாட்டை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கிவிட்டு, மிளகாய், தேங்காய், சோம்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக்கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொண்ணிறமாக மாறியவுடன் தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வதங்கிய பின் அரைத்த விழுதை போட்டு அரை டம்ளர் தண்ணீர் மற்றும் ஊற்ற வேண்டும். அதிகமாக ஊற்றினால் குழம்பாக மாறிவிடும். இறுதியாக நாம் சுத்தம் செய்து வைத்த கருவாடையும் போட்டு அதிகமாக கிளறாமல் 5 நிமிடம் சிம்மில் வைத்து மூட வேண்டும். மசாலா மற்றும் கருவாடு ஒன்றாக கலந்து கெட்டியாக வந்தவுடன் இறக்கவும். மிக மிக சுவையான கருவாடு மசாலா பொரியல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here